வாக்காளர்கள் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உதவி கலெக்டர் அலுவலக வளாகத்தில் கோலம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில் கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளர்கள் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக குளித்தலை உதவி கலெக்டர் அலுவலக வளாகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் ரங்கோலி கோலம் வரைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.
இதில் முதன்மை வாக்காளர்கள் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை குறித்து தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை குளித்தலை உதவி கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் நேரில் பார்வையிட்டுள்ளார். அதன்பின் அனைவரும் நேர்மையாகவும் உண்மையாகவும் வாக்களிப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அரசு ஊழியர்கள், பொதுமக்கள் போன்ற பலர் கலந்து கொண்டுள்ளனர்.