சாலையோரத்தில் காய்ந்து கிடந்த செடி கொடிகளில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள கோரக்காட்டுவலசு பகுதியில் சாலையின் ஓரத்தில் காய்ந்து கிடந்த செடி கொடிகளில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. அந்த சமயத்தில் காற்று வேகமாக வீசியதால் தீ மளமளவென பரவி தனியாருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள காய்ந்த புற்களிலும் பற்றியுள்ளது. இதனை பார்த்த அப்பகுதியில் உள்ளவர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலின்படி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த தீ விபத்து ஏற்படுவதற்கான காரணம் பீடி, சிகரெட் பற்ற வைத்துவிட்டு அணைக்காமல் வீசியது ஆகும் என தீயணைப்புத் துறையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.