Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

போதிய மழை இல்லை… தண்ணீரை தேடி அலையும் வனவிலங்குகள்… வேண்டுகோள் விடுத்த பொதுமக்கள்…!!

வனப்பகுதியில் உள்ள குரங்குகள் தண்ணீரை தேடி அலைவதால் உரிய நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள பாலமலை வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இங்குள்ள விலங்குகளுக்கு வனப்பகுதியில் உள்ள சிறிய தாவரங்கள் மற்றும் புற்புதர்கள் உணவாக இருக்கின்றன. மேலும் வனப்பகுதிக்குள் அமைந்துள்ள குட்டையில் தண்ணீரை குடித்து தாகத்தை தீர்த்துக் கொள்கின்றன. இந்நிலையில் அப்பகுதியில் போதிய மழை இல்லாத காரணத்தினால் வனப்பகுதி முழுவதும் வறண்டு காணப்படுகின்றது.

அதனுடன் குளம், குட்டைகள் அனைத்தும் வறண்டு போயிருப்பதால் குரங்குகளும் மற்ற வனவிலங்குகளும் தண்ணீரை தேடி வனப்பகுதியை சுற்றியுள்ள வயல், தோட்டத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றது. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வனப்பகுதிக்குள் ஆங்காங்கே குட்டைகள் அமைத்து அதில் தண்ணீரை நிரப்பி வனவிலங்குகளை காப்பாற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.

Categories

Tech |