அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனத்தின் தடுப்பூசி போட்டுக் கொள்வதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என உலக சுகாதார நிறுவனம் தகவல் அளித்துள்ளது.
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகள் அஸ்ட்ரோ ஜெனிகா நிறுவனம் தயாரித்த தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கி மக்களுக்கு செலுத்தியுள்ளது. இதனிடையே இந்த நிறுவனத்தின் தடுப்பூசிகளை போட்டுக் கொண்ட சிலருக்கு ரத்தம் உறைந்துள்ளதாகவும், இதனால் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் தயக்கம் காட்டுவதாகவும் கூறி அந்நாட்டு அரசு தடுப்பூசி வினியோகத்தை குறைத்துள்ளது.
இதனால் உலக சுகாதார நிறுவனத்தின் தடுப்பு மருந்து ஆலோசனைக் குழுவினர் இத்தடுப்பூசி குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அவர்கள் மேற்கொண்ட ஆய்வில் அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசிகளுக்கும், ரத்தம் உறைதலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் மேலும் இந்த தடுப்பூசிகளை போட்டு கொண்டவர்களில் இதுவரை யாருக்கும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசிகளை பயன்படுத்துவதில் எந்த பிரச்சினையும் இல்லை என உலக சுகாதார நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் மார்க்ரெட் ஹாரிஸ் தகவல் தெரிவித்துள்ளார்.