நம்பிக்கை வாக்கெடுப்பை உடனே நடத்தக்கோரி கர்நாடகா சுயேட்சை எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கர்நாடகாவில் அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேர் திடீரென ராஜினாமா செய்தது ஆளும் குமாரசாமி அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்படுத்தியது. தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் குழப்பத்திற்கு முடிவு கட்டும் வகையில் ஜூலை 18ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த தயாராக இருப்பதாக குமாரசாமி தெரிவித்தார். ஆனால் ஜூலை 18 அன்று நம்பிக்கை வாக்கெடுப்பின் மீதான விவாதங்கள் மட்டுமே நடைபெற்றதையடுத்து,
வெள்ளிக்கிழமை மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா காங்கிரஸ் மாநில ஆளுநர் உள்ளிட்டோர் சபாநாயகர் இடமும், குமாரசாமி இடமும் வலியுறுத்தி வந்தனர். இதை தொடர்ந்து வருகின்ற ஜூலை 22 வரை அவையை ஒத்தி வைக்குமாறு சபாநாயகரிடம் காங்கிரஸ்,பாஜகவின் சார்பாக வேண்டுகோள் வைக்கப்பட்டது. இதனை ஏற்ற சபாநாயகர் அவையை ஜூலை 22 அன்று ஒத்திவைத்தார்.
இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்த கோரி உத்தரவிடுமாறு கர்நாடகா சுயேச்சை எம்எல்ஏ ஆர்.சங்கர் மற்றும் ஹெச்.நாகேஷ் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் இதனை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று மறுத்த நிலையில், நாளையாவது விசாரிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டதற்கும் பார்க்கலாம் என்ற பதிலை உச்சநீதிமன்றம் அளித்துள்ளது.