மணப்பெண்ணை தேடித்தருமாறு 2 அடி உயரமுடைய நபர் ஒருவர் காவல் துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த 2 அடி உயரமுடைய நபர் அசீம் மன்சூரி (26 வயது). இவர் அப்பகுதியில் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் இவர் கடந்த 5 வருடமாக திருமணம் செய்து கொள்வதற்காக பெண் தேடி வருகின்றார். ஆனால் இவரின் உயரத்தை காரணம் காட்டி எந்தப்பெண்ணும் திருமணம் செய்துகொள்ள முன்வரவில்லை. இதனால் மனமுடைந்த இவர் கடந்த 2019ஆம் ஆண்டு உத்திரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் மற்றும் தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து தனது ஆசையை கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி காவல்துறையினரிடம் மணப்பெண்ணை தேடி திருமணம் செய்து வைத்து பொது சேவை செய்யுமாறு கோரிக்கையும் வைத்துள்ளார். இவரது கோரிக்கைகையை கேட்டு சற்று அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் “எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை இருந்தாலும் ஏதாவது உதவ முடியுமா? என்று முயற்சி செய்து பார்க்கிறோம்” என்று கூறியுள்ளார். இதனிடையே தனக்கு திருமணம் நடந்தே ஆக வேண்டும் என்பதில் மும்முரமாக இருக்கும் அசீம் மன்சூரி “திருமணத்தை நினைத்து நான் பல நாட்கள் தூங்காமல் இருக்கிறேன் எனது வாழ்க்கை பகிர்ந்து கொள்ள யாரும் இல்லையா? “என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.