வீட்டிற்குள் புகுந்த பாம்பு தீயணைப்புத் துறையினரால் பிடிக்கப்பட்டு காட்டிற்குள் விடப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்திலுள்ள நடையனூர் காரைபாளையம் பகுதியில் குணசேகரன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருடைய வீட்டில் நல்லபாம்பு புகுந்து படம் எடுத்து ஆடியுள்ளது. இதனை கண்டதும் குணசேகரனும் அவரது குடும்பத்தினரும் வீட்டிலிருந்து வெளியே வந்து பாம்பை விரட்ட முயற்சித்துள்ளனர்.
ஆனால் பாம்பு வெளியே வராமல் வீட்டிற்குள்ளே பதுங்கியிருந்தால் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீட்டிற்குள் இருந்த பாம்பை பிடித்து வனப்பகுதிக்குள் சென்று விட்டுள்ளனர்.