Categories
தேசிய செய்திகள்

நள்ளிரவில் காதலி கேட்ட விஷயம்… அதற்காக காதலன் செய்த செயல்… என்ன தெரியுமா..?

காதலி நள்ளிரவில் சாக்லேட் சாப்பிட ஆசைப்பட்டதால் கடையை உடைத்து சாக்லெட்டை எடுத்து பரிசளித்த காதலனை போலீசார் கைது செய்தனர்.

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் மாவட்டம் பகுதியில் வசித்து வருபவர் அவிநாசி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் அடிக்கடி போனில் பேசி வந்துள்ளனர். நள்ளிரவில் பேசிக்கொண்டிருந்த போது அவரின் காதலி தனக்கு சாக்லேட் சாப்பிட வேண்டும் என்று ஆசையாக உள்ளதாக கூறினார். இதைக்கேட்ட அலைந்து திரிந்து உள்ளார்.

ஆனால் ஒரு கடையும் திறக்காததால் வேறுவழியின்றி அப்பகுதியில் இருந்த கடையின் பூட்டை உடைத்து ஃபிரிட்ஜில் வைத்திருந்த 700 சாக்லேட்டுகளை திருடி தனது காதலிக்கு பரிசளித்துள்ளார். மறுநாள் காலை வழக்கம் போல் கடையை திறந்த உரிமையாளர் கடையில் திருட்டு போனதை அறிந்து காவல்துறையில் புகார் அளித்தார். பின்னர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது அவினாஷ் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் தன் காதலி ஆசையை நிறைவேற்ற இவ்வாறு செய்ததாக அவர் கூறினார்.

Categories

Tech |