தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பமும், தொகுதி ஒதுக்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருகிறது. ஒரு சில கட்சிகளில் தொகுதி ஒதுக்கீடுவதில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக ஒரு சில எம்எல்ஏக்கள் கட்சியை விட்டு விலகி வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சி இல்லாமல் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற வாய்ப்பில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் சிறிய கட்சியாக இருந்தாலும் திமுகவும் காங்கிரசும் இணையும் போதுதான் பெரிய வெற்றி கிடைக்கும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். ப.சிதம்பரத்தின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.