Categories
தேசிய செய்திகள்

மனைவி மீது சந்தேகம்… ஆத்திரத்தில் மனைவியின் கை,கால்களை கோடாரியால் துடித்த கணவர்… பரபரப்பு சம்பவம்..!!

மனைவி மீது சந்தேகப்பட்டு கணவன் குடிபோதையில் மனைவியின் கை கால்களை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேசம் போபாலில் வசித்து வரும் சிசோடியா என்பவரின் மனைவி சங்கீதா. இவர்களுக்கு ஒரு மகனும் உண்டு. சங்கீதா இந்தூரில் உள்ள தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இதனால் அங்கேயே தங்கி விடுமுறை நாட்களுக்கு மட்டும் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்த சிசோடியாவிற்கு மனைவி சங்கீதா யாருடனாவது தொடர்பில் இருப்பாரா என்று சந்தேகம் எழுந்துள்ளது .

இந்த நிலையில் விடுமுறை தினத்தன்று வீட்டிற்கு வந்த சங்கீதாவிடம் யாருடனாவது கள்ளத் தொடர்பு இருக்கிறதா என்று கேட்டு சண்டை போட்டுள்ளார். இருவருக்கும்  இடையில் வாக்குவாதம் முற்றவே அங்கிருந்த கோடாரியை எடுத்து மனைவி சங்கீதாவின் வலது கை மற்றும் கால்களை வெட்டியுள்ளார். இதையடுத்து அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சங்கீதாவின் தலையை துண்டாக்கும் முன்பு அவரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் சுயநினைவு இழந்த சங்கீதாவை மருத்துவமனையில் அனுமதித்தனர்.  மேலும் சிசோடியா மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Categories

Tech |