அமெரிக்காவில் மியாமி நகரில் நடைபெற்ற திருமணத்தில், மனைவி தன்னுடைய கணவருக்காக விலை மதிப்புடைய பரிசை கொடுத்தது, அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
திருமணத்தில் மணமகன்,மணமகள் ஆகிய இருவரும் தங்கள் அன்பை வெளிப்படுத்த பரிசுப் பொருளைக் கொடுத்து ஒருவரையொருவர் மகிழ்விப்பது ,பெரும்பாலான நாடுகளில் வழக்கமாக உள்ளது. திருமண ஜோடிகள் தங்களது வசதிக்கேற்ப கார் ,மோட்டார் பைக் ,நகைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் போன்றவற்றை வாங்கிக் கொடுத்து தங்கள் அன்பை பகிர்ந்து கொள்வார்கள். இந்த வகையில் அமெரிக்காவில் நடைபெற்ற திருமணத்தில் மணப்பெண் தன் வருங்கால கணவனுக்கு ,விலை உயர்ந்த பரிசு கொடுத்துள்ளது, மணமகனை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. janeen solder ,traderick gray என்ற ஜோடிக்கு கடந்த 7ம் தேதி திருமணம் நடைபெற்றது.
மணமேடையில் மணமகள் தன் வருங்கால கணவரை பார்த்து கூறுகையில், நீங்கள் என்னை திருமணம் செய்வதை, நான் மிகப்பெரிய பரிசாக கருதுகிறேன். உங்களிடம் அனைத்து வசதிகளும் உள்ளது. அதனால் என்ன பரிசு கொடுப்பது என்று எனக்கு தெரியவில்லை. என்னால் முடிந்த பரிசை மியாமியிலிருந்து உங்களுக்கு கொண்டு வந்துள்ளேன் என்று கூறி ,கூட்டத்தை விலக்கி தன் பரிசை காட்டினார். அப்போது அந்த நீர்பகுதியில் , விலைமதிப்புள்ள ஆடம்பர படகு ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இவ்வளவு விலை உயர்ந்த பரிசை தன் மனைவி கொடுத்ததை நினைத்து கணவன் சொல்ல வார்த்தைகள் இல்லாமல் ,இன்ப அதிர்ச்சியில் வாயடைத்து நின்றார். இந்த பரிசானது கணவரை மட்டுமல்லாமல் திருமணத்திற்கு வந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது .