தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பமும் தொகுதிப் பங்கீடுவதில் இழுபறியும் நீட்டித்து வருகிறது. அந்தவகையில் திமுக தலைவர் ஸ்டாலின் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதையடுத்து திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று திமுக தேர்தல் அறிக்கை யை முக ஸ்டாலின் வெளியிட்டார். அதற்கு முன்னதாக கலைஞர் நினைவிடத்தில் திமுக தேர்தல் அறிக்கை வைத்து வணங்கிவிட்டு பின்னர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் .
திமுக தேர்தல் அறிக்கையில் பல்வேறு நலத்திட்டங்கள் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில் இது குறித்து பேசி எஸ்.பி வேலுமணி, ” தமிழகம் முழுவதுமாக முதல்வர் அலை தான் வீசுகிறது. இந்த சட்டமன்ற தேர்தலிலும் அவர் தான் வெற்றி பெறுவார். திமுக சாத்தியமே இல்லாத அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. திமுகவின் இந்த அறிக்கை காலியான பெருங்காய டப்பா தான் என்று விமர்சனம் செய்துள்ளார். உண்மையான தேர்தல் அறிக்கையை அதிமுக சீக்கிரமாகவே வெளியிடும் என்றும் தெரிவித்துள்ளார்.