Categories
அரசியல் மாநில செய்திகள்

பறக்கும் படை அலுவலரை மிரட்டல்…. அமைச்சர் மீது 2 பிரிவுகளில் வழக்கு…!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தேர்தலை களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. மக்களுக்கு ஓட்டிற்கு பணம் விநியோகிப்பதை தடுப்பதற்காக பறக்கும் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவில்பட்டியில் தேர்தல் பறக்கும் படை அலுவலரை மிரட்டிய புகாரில் அமைச்சர் கடம்பூர் ராஜு மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் கடம்பூர் ராஜுவின் காரை பறக்கும் படையினர் சோதனை செய்ததன் காரணமாக பறக்கும் படை அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து இடமாற்றம் செய்யப்பட்ட பறக்கும் படை அதிகாரி ண்டும் அதே இடத்தில் பணி நியமனம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |