Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற பெண்…. வழியில் நேர்ந்த சோகம்…. எவ்வளவு முயற்சி செய்தும் முடியல…. மர்ம நபர்களை தேடும் போலீஸ்….!!

கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த  மர்ம நபர்கள் தங்க நகையை பறித்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

மதுரை மாவட்டம் செல்லூரில் அர்ச்சுனன் என்பவர் அவரது மனைவி முத்துச்சரத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அர்ஜூனனின் மனைவி சுவாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு சென்றுள்ளார். இதனை கவனித்த  மர்ம நபர்கள் இரண்டு பேர் முத்துச்சரத்தை பின் தொடர்ந்து சென்றுள்ளனர். இதனை கவனிக்காத முத்துச்சரம் கோவிலுக்கு எல்ஐசி அலுவலகம் வழியாக சென்றிருக்கிறார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் சென்ற மர்ம நபர்கள் முத்துச்சரத்தின் கழுத்தில் இருந்த 9 பவுன் நகையை கொள்ளையடிக்க முயற்சித்த நிலையில் , முத்துச்சரம் அலரி கூச்சலிடும் மர்ம நபர்கள் விடாமல் நகையை பறித்துவிட்டு மின்னலாய் சென்றுள்ளார்கள் . இதையடுத்து முத்துச்சரம் கொடுத்த புகாரின் பேரில் மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |