தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள்.
அதன்படி அதிமுக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அது மட்டுமன்றி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை இறுதி செய்து கட்சி வெளியிட்டு வருகிறது. இதற்கு மத்தியில் தாங்கள் கேட்ட தொகுதிகளை ஒதுக்காததால் அந்த கட்சியில் இருந்து பிரிந்து சென்று வேறு கட்சியில் இணைந்து வருகின்றனர். அதனால் சற்று பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ஒவ்வொரு கட்சியினரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. அதன்படி திமுக கூட்டணியில் 6 தொகுதிகளில் போட்டியிட உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வால்பாறை- ஆறுமுகம், தளி- ராமச்சந்திரன், திருப்பூர் வடக்கு- ரவி, பவானிசாகர்- சுந்தரம், திருத்துறைப்பூண்டி – மாரிமுத்து, சிவகங்கை – குணசேகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.