Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சண்டே ஸ்பெஷலாக… சிக்கனில்… இந்த புதுவகையான ரெசிபிய செய்து அசத்துங்க..!!

பெப்பர் சிக்கன் செய்ய தேவையான பொருட்கள்:

சிக்கன்                                     – அரை கிலோ
வெங்காயம்                          – 1
இஞ்சி பூண்டு பேஸ்ட்     – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய்                  – 3
உப்பு                                          – தேவையான அளவு
எலுமிச்சை சாறு                – 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை                    – சிறிதளவு
தனியா தூள்                         – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள்                         – 1/2 டீஸ்பூன்
எண்ணெய்                             – தேவையான அளவு
மிளகு                                       – 3 டீஸ்பூன்
கொத்தமல்லி                      – சிறிதளவு

செய்முறை:

முதலில் சிக்கனை எடுத்து  நன்றாக சுத்தம் செய்து, துண்டுகளாக வெட்டி கொள்ளவும். பின்பு வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கியும், இஞ்சி மற்றும் பூண்டை தனியாக மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைத்தும் கொள்ளவும்.

மேலும் கழுவிய சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் மஞ்சள் தூள், அரைத்த இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, எலுமிச்சை சாறை ஊற்றி நன்கு கலந்து,  ஃபிரிட்ஜில் 30 நிமிடம் ஊற வைக்கவும். மேலும் மிளகை நன்கு இடித்து கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, ஏலக்காய் , கிராம்பு சேர்த்து தாளித்ததும், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்பு அதனுடன்,  பச்சை மிளகாய்யை சேர்த்து வதக்கியபின், அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு பிரட்டவும்.

அதனை அடுத்து,  அதில் தனியா பொடி, இடித்த மிளகுப் பொடியை  சேர்த்து நன்கு  கிளறி விடவும்.
மேலும் அதனுடன் 1/4 கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்தபின் அதிலுள்ள தண்ணீரானது  வற்றி சிக்கன் மென்மையாக வெந்து வரும் வரை கொதிக்க வைக்கவும்.

இறுதியில் கொதிக்க வைத்த கலவையானது, நன்கு வற்றியதும் அதில் கொத்தமல்லி தழையை  தூவி இறக்கியவுடன், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து சிறிது கிளறி பரிமானால் சுவையான ஆந்திரா ஸ்டைல் பெப்பர் சிக்கன் தயார்.

Categories

Tech |