நடிகர் யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டேலா’ படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வருபவர் யோகிபாபு. விஜய், ரஜினி போன்ற டாப் ஹீரோக்களின் படத்தில் காமெடி நடிகராக கலக்கி வந்த யோகிபாபு ஒருசில படங்களில் ஹீரோவாகவும் நடித்து அசத்தி வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ட்ரிப் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் யோகி பாபு நடிப்பில் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மண்டேலா’ படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.
https://twitter.com/yogibabu_offl/status/1370725106083721218
தேர்தல் அறிக்கை, வேட்பாளர் அறிவிப்பு என தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள இந்த நேரத்தில் அரசியல் நையாண்டி வசனங்களுடன் வெளியான மண்டேலா டீசர் இணையத்தை கலக்கி வருகிறது. மேலும் இந்த படத்தில் சங்கிலி முருகன் , ஷீலா ராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது நடிகர் யோகிபாபு ஜெகஜால கில்லாடி, பேய் மாமா, சதுரங்க வேட்டை 2 ,பொம்மை நாயகி உள்ளிட்ட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.