பிக்பாஸ் பிரபலம் வனிதா பிரபல நடிகரின் படத்தில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘சந்திரலேகா’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் வனிதா விஜயகுமார் . இதையடுத்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார். தற்போது இவர் காற்று , 2k அழகானது காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
All the best from the bottom of my heart @actorprashanth …kill it…cant wait to join the team https://t.co/Pdxb2cdksF
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) March 10, 2021
இந்நிலையில் பிரபல நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘அந்தகன்’ படத்தில் இணைந்துள்ளதாக வனிதா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்தாதூன் படத்தின் ரீமேக் படமான அந்தகன் படத்தில் சிம்ரன், கேஎஸ் ரவிக்குமார் ,ஊர்வசி ,மனோபாலா, கார்த்திக் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் .