Categories
மாநில செய்திகள்

Just In: தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு?… முதல்வர் இன்னும் சற்று நேரத்தில் அவசர ஆலோசனை… பரபரப்பு…!!!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்த.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் இன்னும் சற்று நேரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ஊரடங்கி ல் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |