தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பமும், இழுபறியும் நீடித்து வருகிறது. அந்தவகையில் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக கட்சி தொகுதி ஒதுக்கிடுவதில் ஏற்பட்ட அதிருப்தியில் காரணமாக தேமுதிக விலகியது. இதனால் மக்கள் நீதி மையம் தேமுதிகவுக்கு அழைப்பு விடுத்தது. ஆனால் தேமுதிக அதை கண்டுகொள்ளவில்லை. ஆனால் அமமுகவுடன் கூட்டணி வைக்க உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் அமமுக மற்றும் தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் அமமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 65 முதல் 70 இடங்களை ஒதுக்க அமமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கூட்டணி தமிழகத்தில் மூன்றாவது அணியாக அதிமுக திமுக கூட்டணிக்கு சவாலாக இருக்கும் என்று இரண்டு கட்சிகளும் தெரிவித்துள்ளனர்.