Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சளி, இருமலுக்கு ஏற்ற… அருமையான சுவையில்… ருசியான இந்த ரெசிபிய செய்து கொடுங்க..!!

முட்டை மிளகு மசாலா  செய்ய தேவையான பொருட்கள்:

வேகவைத்த முட்டை       – 6
வெங்காயம்                            – 4
தக்காளி                                    – 3
பூண்டு                                       – 6
மிளகு                                        – 2 டீஸ்பூன்
உப்பு                                           – தேவையான அளவு
பட்டை,ஏலக்காய்               – தேவையான அளவு
இஞ்சி                                        – சிறிதளவு
தக்காளி சாஸ்                       – 1/4 கப்

செய்முறை:

முதலில்அடுப்பில்  பாத்திரத்தை வைத்து முட்டையை போட்டுசிறிது தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்து கொள்ளவும். பின்பு வெங்காயம், பூண்டு, இஞ்சியை நறுக்கி கொள்ளவும்.

மேலும் கடாயை அடுப்பில் வைத்து அதில்  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, ஏலக்காய் சேர்த்து வறுத்ததும், வெங்காயம், பூண்டு, இஞ்சி, தக்காளி சாஸ், சேர்த்து பொன்னிறமாக வதக்கி  கொள்ளவும்.

பின்பு அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளியை போட்டு வதக்கியதும்  மிளகு பொடி, உப்பு,கருவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.

பின்னர் வேக வைத்த முட்டையை இரண்டாக வெட்டி, அதில் வெந்த கலவையை வைத்து அதை சுற்றி  கலவைப்படும்படி கிளறி இறக்கி பரிமாறினால் முட்டை மிளகு மசாலா தயார்.

Categories

Tech |