தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் ஒவ்வொரு கட்சியும் கூட்டணி குறித்த குழப்பமும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீட்டித்து வருகிறது. அதிமுகவில் பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியானது.
அரவக்குறிச்சியில் -அண்ணாமலை, ஆயிரம்விளக்கு – குஷ்பு, காரைக்குடி – ஹெச்.ராஜா, கோவை தெற்கு- வானதி சீனிவாசன், நாகர்கோவில் – எம்.ஆர் காந்தி, தாராபுரம்(தனி)- எல்.முருகன், விருதுநகர்-பாண்டுரங்கன், ராமநாதபுரம்-குப்புராம், நெல்லை- நயினார் நாகேந்திரன் ,குளச்சல் – ரமேஷ், துறைமுகம் -வினோஜ்செல்வம், திருவண்ணாமலை -தணிகைவேல், மொடக்குறிச்சி – சி.கே சரஸ்வதி, திட்டக்குடி -பெரியசாமி,, திருவையாறு- பூண்டி வெங்கடேசன், மதுரை வடக்கு- சரவணன்.