கனடாவில் சமூக ஆர்வலர் ஒருவர் 7 பேர் கொண்ட மர்ம கும்பல் தன்னை சராமாரியாக தாக்கியதற்கான வீடியோவை வெளியிட்டுள்ளார்.
கனடாவில் உள்ள Vancover என்ற பகுதியைச் சேர்ந்தவர் Chris Elston. சமூக ஆர்வலரான இவர் குழந்தைகள் பருவம் அடைவதை தடுக்கக் கூடிய மருந்துகள் உபயோகிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் Montreal என்ற நகரத்தில் மர்ம கும்பல் சிலரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது Montreal நகரில் உள்ளூரை சேர்ந்த ஒரு நபருடன் நான் பேசிக் கொண்டிருந்தபோது, முகங்களை மூடியபடி 7 நபர்கள் கொண்ட மர்ம கும்பல் திடீரென்று என்னருகே வந்து என்னை பலமாக தாக்கியதோடு, என் உடலில் நான் பொருத்தியிருந்த கேமராவையும் பறித்து சென்றனர்.
I’m all good. Just waiting for an x-ray on my forearm but I’ll be fine. I used it to block several pylon hits.
They took my sign with the bodycam but I managed to film them with my phone during the tail end of the assault. pic.twitter.com/CELzJ31Zef
— Billboard Chris 🇨🇦🇺🇸 (@BillboardChris) March 13, 2021
ஆனாலும் அவர்கள் என்னை தாக்கியதை செல்போனில் பதிவு செய்துள்ளேன். இதனால் என்னால் அவர்களை எதிர்த்துப் போராட முடியவில்லை. மேலும் நான் தற்காப்பிற்காக அவர்களை அடித்து, காவல்துறையினரிடம் மாட்டிக்கொள்வதை விரும்பாததால் அவர்களை எதிர்த்து நான் தாக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்கள் தாக்கியதில் என் கை எலும்பு முறிந்துவிட்டது. எனினும் இந்த தாக்குதலினால் நான் சோர்ந்து போவேன் என்று அந்த கும்பல் நினைப்பார்கள் என்றால் அது மிக தவறானது என்று கூறியுள்ளார். மேலும் இந்த கும்பலில் ஒரு பெண்ணும் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதனை தன் ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.