Categories
அரசியல் மாநில செய்திகள்

இனி ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்… முதல்வர் ஈபிஎஸ் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும் திட்டம் செயல்படுத்தப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள். அதன்படி அதிமுக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மேலும் ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அது மட்டுமன்றி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை இறுதி செய்து கட்சி வெளியிட்டு வருகிறது. இதற்கு மத்தியில் தாங்கள் கேட்ட தொகுதிகளை ஒதுக்காததால்  அந்த கட்சியில் இருந்து பிரிந்து சென்று வேறு கட்சியில் இணைந்து வருகின்றனர். அதனால் சற்று பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

மேலும் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக தேர்தல் அறிக்கைகளை ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டு வருகிறது. அதன்படி அதிமுக மற்றும் திமுக போட்டியிட்டுக் கொண்டு பல்வேறு தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் திமுக தனது தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில் மக்களைக் கவரும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. இதனை அடுத்து அதிமுக தனது தேர்தல் அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் நெசவாளர்களுக்கு ஒரு லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தேவையான கடன் உதவி வழங்கப்படும். கோதாவரி மற்றும் காவிரி இணைப்பு திட்டத்தை மேற்கொள்ள தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிமுக ஆட்சியில் 100 நாட்கள் வேலை, 150 பணி நாட்களாக உயர்த்தப்படும். மாதம்தோறும் மின் பயனீட்டு கணக்கிடு நடைமுறை அமல் படுத்தப்படும். மகப்பேறு விடுப்பு காலம் ஒரு வருடம் ஆக உயர்த்தப்படும். பொங்கல் பண்டிகை உதவித்தொகை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும் திட்டம். ஏழை திருமண தம்பதிகளுக்கு சீர்வரிசை வழங்கப்படும். தமிழகத்தில் வீட்டில் ஒருவருக்கு கட்டாயம் அரசு பணி வழங்கப்படும்.

மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டப்படும். புற்றுநோய் சிகிச்சைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு தனியார் பங்களிப்புடன் காலை சிற்றுண்டி திட்டம். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 10,000 ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும். வேலை இல்லாத இளைஞர்களுக்கு இரட்டிப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும் இரண்டு நாட்களுக்கு குறைந்த வட்டியுடன் தொழில் தொடங்க நிதி உதவி திட்டம்.

Categories

Tech |