இலங்கையில் வேலை பார்த்த பெண்ணின் முகத்தில் முதலாளி வீட்டில் இருந்த ஒருவர் கொதிக்க கொதிக்க சுடு தண்ணீரை ஊற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் புத்தளம் பகுதியில் வசித்து வரும் தங்கமணி என்ற வயதான பெண் தன் குடும்பத்தின் வறுமை காரணமாக ஒரு வீட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். அந்த வீட்டில் இருந்த ஒரு பெண் வயதான இந்தப் பெண்ணின் முகத்தில் கொதிக்கும் தண்ணீரை ஊற்றி யுள்ளார். இதனால் வேதனை தாங்காமல் அவர் உள்ளார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த பெண்ணின் கணவன் மகள் மகன் இருந்தும் அவர் வயிற்று பசிக்காக வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. வயதான பெண் எந்த தவறு செய்தாலும் இப்படி கொடூரமாக நடந்து கொள்வது என்று பலரும் அவரை திட்டி வருகின்றனர். அந்த பெண்ணின் முகத்தில் வெந்நீரை ஊற்றிய பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். தற்போது வயதான பெண்ணிற்கு ஏற்பட்ட காயம் குணமடைந்து வருவதாக கூறப்படுகிறது.