திருப்பூரில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர்.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் விழிப்புணர்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் கோவையை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர்.
இந்த பேரணியானது திருப்பூர் ரயில் நிலையத்தில் தொடங்கி மாநகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. பேரணியில் உதவி ஆணையர் செல்வவிநாயகம், மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார், சுகாதார ஆய்வாளர்கள் பிச்சை, முருகன், இந்திரன், ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர். இந்த பேரணியில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ-மாணவிகள் கோஷம் எழுப்பினர்.