Categories
அரசியல் மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. ஆண்டுதோறும் ரூ.7,500 உழவு மானியம் – அதிரடி…!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றனர். நேற்று திமுக தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். இதையடுத்து இன்று அதிமுக தேர்தல் அறிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டு வருகிறார். அதில் விலையில்லா கேபிள் டிவி இணைப்பு.

நகரப் பேருந்துகளில் மகளிருக்கு கட்டண சலுகை, கல்வி கடன் ரத்து செய்யப்படும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படும்,  மகப்பேறு விடுப்பு காலம் 12 மாதங்களாக உயர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் மதுபானக் கடைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும். வீட்டிற்கு ஒரு வாஷிங் மெஷின் வழங்கப்படும். வீட்டில் ஒருவருக்கு அரசுப்பணி. ரேஷன் பொருட்கள் வீடு தேடி  வந்து வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.7,500 உழவு மானியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

 

Categories

Tech |