நடிகர் விஷ்ணு விஷால் காடன் படப்பிடிப்பின்போது யானையுடன் பழகிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் ராணா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காடன் . இந்த படத்தில் சோயா ஹுசைன் ,அஸ்வின் ராஜா ,டின்னு ஆனந்த், புல்கிட் சாம்ராட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ், ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தை ஈராஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
More of #Kaadan & #Aranya shooting spot experiences…
When getting on and getting off #Unni got a bit easier on the second day 😁
Watch how he gobbles up the jaggery laddoo.. 🐘❤️@RanaDaggubati @PulkitSamrat @ErosNow pic.twitter.com/XOolh5KlTn
— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) March 14, 2021
ஏ.ஆர்.அசோக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு சாந்தனு மொய்த்ரா இசையமைத்துள்ளார் . இந்த படம் வருகிற மார்ச் 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் காடன் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது யானையுடன் அன்பாக பழகிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .