கனடாவிலுள்ள வின்னிப்பெக் நகரில் வீட்டில் இளைஞர் ஒருவர் சரமாரியாக அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கனடாவில் 30 வயதான ருசல்ட் கிபல்ட் என்ற நபர் கொடூரமாக அடித்து உடம்பில் காயத்துடன் வீட்டில் கிடந்துள்ளார். இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு அளவில் நடந்துள்ளது. சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் வந்த நிலையில் உடனே சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வீட்டில் இளைஞர் படுகாயத்துடன் மயக்க நிலையில் கிடப்பதை கண்டுள்ளனர்.
உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்ற ருசல்ட் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றது. மேலும் இதுகுறித்து யாருக்கேனும் தகவல் கிடைத்தால் தங்களிடம் தெரிவிக்குமாறு போலீசார் அறிவித்துள்ளனர்.