கிணற்றில் மூழ்கி பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள மேல கலங்கள் தெற்கு தெருவில் காளிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பேச்சிமுத்து என்ற மகன் உள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பேச்சிமுத்து தனது குடும்பத்துடன் கடையநல்லூர் அருகில் உள்ள பெரியநாயகம் கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற போது, தனது நண்பர்களுடன் அங்குள்ள ஒரு கிணற்றில் குளித்துள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக பேச்சிமுத்து தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார். இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடையநல்லூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் பேச்சிமுத்துவின் உடலை இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து சொக்கம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.