அர்ஜென்டினா ஜனாதிபதி சென்ற வாகனத்தின் மீது போராட்டக்கார்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அர்ஜென்டினாவின் Patagonia பிராந்தியத்தில் தெற்கு மாகாணமான Chubat என்ற இடத்தில் இருக்கும் சமூகம் மையத்திலிருந்து நாட்டின் ஜனாதிபதி Alberto Fernantas வெளியே வந்துள்ளார். அப்போது திடீரென அவரை சுற்றி வளைத்த போராட்டக்காரர்கள் கற்களை வீசியதோடு அவர் வந்த பேருந்தையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.
அதாவது அந்த பகுதியில் சமீபத்தில் காட்டுத் தீ ஏற்பட்டதில் ஒருவர் பலியானதோடு பலர் காயம் அடைந்தனர். எனவே பேரழவு ஏற்பட்ட பகுதியை ஜனாதிபதி நேரில் காண்பதற்காக வருகை தந்த போது தான் போராட்டக்காரர்கள் அவரை தாக்க முயற்சித்துள்ளார்கள். மேலும் Chubat-ல் சுரங்கப் பணிகளை மீண்டும் தொடங்க அரசு மேற்கொண்ட திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்கள் தான் ஜனாதிபதியை சுற்றிவளைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
https://twitter.com/ActualidadRT/status/1370921523628871681
மேலும் உள்ளூர் செய்திதாள் ஒன்றில் தங்கம், வெள்ளி மற்றும் யுரேனியம் நிறைந்து காணப்படும் பகுதியில் சுரங்க திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்காக அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டதால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் இவ்வாறு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கலவரம் தொடர்பாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதாவது, ” Chubat அல்லது அர்ஜென்டினா முழுவதும் உள்ள மக்களிடையே எந்த வகையிலும் ஆதரவைப் பெறாத குறைந்த எண்ணிக்கையுடையவர்கள் தான் இதனை செய்திருப்பார்கள்” என்று தான் கருதுவதாக தெரிவித்துள்ளார்.