நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படத்தின் டீசரை பிரபல இயக்குனர் புகழ்ந்து பேசியுள்ளார்.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’ . பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக மலையாள நடிகை ரெஜிஸா விஜயன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் லால் ,யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் .
தம்பி மாரி…#KarnanTeaser பார்த்தேன்…
வேற லெவலா இல்ல…
இதுக்கு பேரே வேற வைக்கனும்…
ப்பா..உன் #கர்ணன்…
எல்லோர் மனதையும்
உலுக்காமல் விடமாட்டான்…
உன் குழு மொத்தத்திற்கும்
மிக பெரிய வெற்றிகான சத்தத்தின் வாழ்த்துக்கள்🙏🙏@dhanushkraja @mari_selvaraj @theVcreations pic.twitter.com/LEIL8rDgUp— Subramaniam Shiva (@DirectorS_Shiva) March 13, 2021
இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ‘கர்ணன்’ படத்தின் டீசரை பார்த்துள்ள இயக்குனர் சுப்பிரமணியம் சிவா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘தம்பி மாரி.. கர்ணன் டீசர் பார்த்தேன். வேற லெவலா இல்ல.. இதுக்கு பேரே வேற வைக்கணும்ப்பா.. உன் கர்ணன் எல்லார் மனதையும் உலுக்காமல் விடமாட்டான் . உன் குழு மொத்தத்திற்கும் மிகப்பெரிய வெற்றிக்கான சத்தத்தின் வாழ்த்துக்கள்’ என்று பதிவிட்டுள்ளார் .