நாகை அருகே கடலில் மிதந்து வந்த இரண்டு கஞ்சா பொட்டலங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள காமேஸ்வரத்தில் மீன்பிடிப்பதற்காக மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர். அப்போது இரண்டு பாலித்தீன் பை பொட்டலங்கள் காமேஸ்வரத்திலிருந்து 2 நாட்டிக்கல் மைல் தூரத்தில் கடலில் மிதந்து வந்துள்ளது. அதை பார்த்த மீனவர்கள் அந்த பாலித்தீன் பை பொட்டலங்களை எடுத்து கீழையூர் பகுதியில் உள்ள கடலோர காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
காவல்துறையினர் அந்த பைகளை பிரித்து பார்த்தபோது இரண்டு பையிலும் 2 கிலோ வீதம் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். அந்த கஞ்சாவின் மதிப்பு ரூ. 30 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இதையடுத்து அந்த கஞ்சா பொட்டலங்கள் படகில் கடத்தி சென்ற போது தவறி விழுந்ததா ? விற்பனைக்கு எடுத்துச் சென்றபோது காவல்துறையினரை கண்டவுடன் வீசிவிட்டு சென்றனர் ? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.