Categories
டெக்னாலஜி பல்சுவை

SD 855+ பிராசஸர் மூலம் இயங்கும் முதல் சியோமி ஸ்மார்ட் போன் ஜூலை 30ல் வெளியீடு ….!!!!

பிளாக் ஷார்க் 2 ப்ரோ, SD 855+ மொபைல் பிராசஸர் மூலம் இயக்கப்படும் முதல் சியோமி ஸ்மார்ட்போன் ஜூலை 30ல் அறிமுகமாகிறது .

பிளாக் ஷார்க் நிறுவனம்,குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸரால் இயங்கும் பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்தது . அதன் தொடர்ச்சியாக இந்நிறுவனம் பிளாக் ஷார்க் 2 மாடலின் மற்றொரு வகை  ஜூலை 30 ஆம் தேதி சீனாவில் அறிமுகமாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பிளாக் ஷார்க் 2 ப்ரோ என்பது சியோமியின் பிளாக் ஷார்க் வரிசையில் மூன்றாவது ஸ்மார்ட்போன் ஆகும், இது இன்னும் சக்திவாய்ந்ததாக இருக்கும். வெய்போவின் பதிவின் படி, பிளாக் ஷார்க் 2 ப்ரோ ஜூலை 30 ஆம் தேதி அறிமுகமாகும் என்றும்,வெளியீட்டு தேதி மற்றும் சிப்செட் தவிர, சியோமி வேறு எந்த விவரங்களையும் குறிப்பிடவில்லை. 5ஜி கனெக்டிவிட்டியை கொண்ட இந்த பிராசஸர்  முந்தைய பிராசஸரை விட  சிறப்பான கேமிங் அனுபவத்தை கொடுக்கும்.

Image result for SD 855+

பிளாக் ஷார்க் 2 2.84GHz ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 6 ஜிபி ரேம் உடன் வருகிறது. பிளாக் ஷார்க் 2 ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குகிறது மற்றும் 4,000 எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.இது சியோமி வாடிக்கையாளர்களுக்கு  மகிழ்ச்சி அளிக்கும் என நம்பப்படுகிறது.

Categories

Tech |