தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் ஒவ்வொரு கட்சியும் கூட்டணி குறித்த குழப்பமும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீட்டித்து வருகிறது. இந்நிலையில் அதிமுகவில் தொகுதி பங்கிடுவதில் இழுபறி நீட்டித்து சில பிரச்சினைகள் வெடித்து வருகின்றது.
இந்நிலையில் கடலூரில் அதிமுக அலுவலகத்தை சிலர் தாக்கியதில் கண்ணாடிகள் உள்ளிட்டவை சேதமடைந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அதிமுக பிரச்சார வண உட்பட 2 வாகனங்கள் சேதம் அடைந்துள்ளது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குறிஞ்சிப்பாடிக்கு ஏற்கனவே அறிவித்த வேட்பாளரை மாற்றியதால் அவரது ஆதரவாளர்கள் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.