கும்பம் ராசி அன்பர்களே…!
இன்று நீங்கள் பேச்சில் நிதானத்தை பின்பற்றுவது மிகவும் சிறந்தது.
தொழில் மற்றும் வியாபாரத்தில் இலக்கு நிறைவேற நீங்கள் கூடுதலாக பணிபுரிய வேண்டும். இன்று சில நபர்கள் உங்களிடம் உதவிகள் கேட்டு வளரக்கூடும். இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது சிறந்தது. முடிந்தால் நீங்கள் வெண்பூசணி சாறு அருந்துவது மிகவும் சிறந்தது. தேவையில்லாத விஷயங்களைப் பற்றி சிந்திக்கவே வேண்டாம். பெண்கள் நகை மற்றும் பணம் இரவல் கொடுக்கவோ கூடாது. ஆடம்பரப் பொருட்களை கையாளும் பொழுது கவனம் தேவை. வெளி இடங்களுக்கு எடுத்துச் செல்லும் பொழுது மிகவும் எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் எடுத்து செல்ல வேண்டும். குடும்பத்தில் இருப்பவர்கள் இடத்தில் அனுசரித்து செல்வது சிறந்தது.
தேவையில்லாத விஷயத்தில் நாட்டம் செலுத்த வேண்டாம். சில நபர்கள் உங்களிடம் தவறான எண்ணங்களை வளர்க்க கூடும். அவர்களிடம் நீங்கள் விலகி இருப்பது சிறந்தது. கொடுக்கல் வாங்கலில் நீங்கள் சிந்தித்து செயல்படுவது சிறந்தது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை சமாளித்து வெற்றி பெற வேண்டும். இன்றைய நாளில் உங்களுக்கு இன்பமும் துன்பமும் இணைந்து காணப்படும். மனம் கொஞ்சம் தெளிவு பெற ஆலயம் சென்று வழிபடுவது சிறந்தது. மாலை நேரத்தில் இசைப் பாடல்களை ரசித்து மகிழுங்கள்.
பிரச்சினையும் இல்லாமல் நெருக்கம் அதிகரிக்கும். குழந்தை இல்லாத தம்பதியருக்கு மழலை செல்வம் கிட்டும்.
காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். இன்று உங்களுக்கு பிரச்சினை இல்லாத வாழ்க்கை ஏற்படும்.
பழைய பிரச்சினைகளும் கண்டிப்பாக தீர்த்து விடும். மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. இன்று நீங்கள் சிவபெருமான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 2 மற்றும் 4. அதிர்ஷ்டமான நிறம் செம்பு மற்றும் இளம் பச்சை நிறம்.