திமுகவில் இருந்து பாஜகவில் இணைந்த திமுக எம்.எல்.ஏ சரவணனுக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. பாஜகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாவட்ட செயலாளர் ஆதிக்கம் திமுகவில் அதிகமாக கோலோச்சி இருக்கின்றது. நிறைய பேருக்கு அது மனதளவில் பாதிப்பை கொடுக்கின்றது. அட்ஜஸ்ட் பண்ணி போடறாங்க நிறையா பேர் இருக்காங்க. நான் சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வரவில்லை. சேவை செய்வதற்கு தான் அரசியலில் இருக்கின்றேன்.
அதற்க்கு இடையூறு இருக்கிறது, அதனால் நான் வெளியே வந்துட்டேன். முக முக.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. ஸ்டாலினை ஏதும் குறை சொல்ல முடியாது.மதுரையில் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கல. ஸ்கூலின் ஹெட்மாஸ்டரை நான் சொல்லல, நான் அங்க இருக்கின்ற டீச்சரை சொல்லி கொண்டு இருக்கின்றேன். அவர்களின் ஒத்துழைப்பு எனக்கு இல்ல. நான் பாஜகவுக்கு வந்தது சீட்டுக்காக இல்லை.
நான் படிச்சு இருக்கேன். சுயமரியாதையோடு இருப்பதற்கு இருக்கிறேன். எனவே இன்னொருத்தரிடம் அடிபணிந்து, அவரை கும்பிட்டு தான் நான் இருக்க வேண்டும் என்று என்ற நிலை எனக்கு கிடையாது. எனக்கு சீட் கொடுக்காதது மாவட்ட செயலாளர்களின் சதி. கம்யூனிஸ்டு கேட்காத திருப்பரங்குன்றத்தை கம்யூனிஸ்ட்க்கு ஓதுக்கியுள்ளனர். திருப்பரங்குன்றம் கம்யூனிஸ்ட்கள் கேட்கவில்லை. மாவட்ட செயலாளர்கள் முடிவு எடுப்பது திமுக தலைவருக்கு கூட தெரியாது என பாஜகவில் இணைந்த திமுக எம்எல்ஏ சரவணன் தெரிவித்தார்.