தமிழக தேர்தல் களம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் செல்கிறது. வேட்பாளர்பட்டியல் அறிவிக்கப்பட்டு வேட்புமனுத்தாக்கல் நடைபெற்றுவருகின்றன. வாக்காளர்களை கவரும் வகையில் வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு கோவை தெற்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார்.
நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக வலிமை பட அப்டேட் கிடைக்கும் தம்பி. #Vanathi4KovaiSouth#Valimai#ValimaiUpdate https://t.co/eFPMday87G
— Vanathi Srinivasan (@VanathiBJP) March 14, 2021
நேற்று ஒருவர் ட்விட்டர் மூலம் அஜித் நடிக்கும் வலிமை அப்டேட் எப்ப என்று வானதி சீனிவாசனுக்கு டேக் செய்துள்ளார். அதற்கு வானதி சீனிவாசன் நான் வெற்றி பெற்றவுடன் நிச்சயமாக வலிமை பட அப்டேட் கிடைக்கும் தம்பி என பதிலளித்து பதிலளித்துள்ளார். இந்த ட்விட் அனைவரையும் பகிரப்பட்டு வருகின்றது.