தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பமும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீட்டித்து வருகின்றது. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதையடுத்து காஞ்சிபுரத்தில் தனது வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டிருந்துள்ளார். இதையடுத்து பிரச்சாரம் முடிந்து திரும்பியபோது வாலிபர் ஒருவர் திடீரென கமல் காரை வழிமறித்து கார் கண்ணாடியை உடைத்துள்ளார்.
இதையடுத்து அந்த நபரை காரில் இருந்து கீழே இறக்கி விட்ட பவுன்சர்கள் கமலஹாசனை ஓட்டல் அறைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மக்கள் நீதி மைய தொண்டர்களும், பொதுமக்களும் சேர்ந்து கமல் கார் மீது தாக்குதல் நடத்திய அந்த நபரை அடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.