தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் நடிகர் அஜித் நடிப்பில் வலிமை படம் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி 500 நாட்களுக்கு மேல் ஆகியும் ஒரு அப்டேட் கூட வரவில்லை என்பதால் அஜித் ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர்.
இதையடுத்து அரசியல் பிரபலங்களிடம் அப்டேட் குறித்து அஜித் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளரான வானதி சீனிவாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ரசிகர்கள் சிலர் வலிமை அப்டேட் எப்போது என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு வானதி சீனிவாசன், “நான் வெற்றி பெற்றவுடன் வலிமை அப்டேட் கண்டிப்பாக கிடைக்கும் தம்பி” என்று தெரிவித்துள்ளார்.