Categories
உலக செய்திகள்

சீனாவில்” 70 மில்லியன் ஆண்டு”… பழமையான டைனோசர்…. புதைபடிவம் கண்டுபிடிப்பு…!!

சீனாவில் 70 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசரின் புதைபடிவம் கண்டுபிடிக்கப்பட்டது.

கிழக்கு சீனாவில் உள்ள கன்சோ நகரில் ரயில் நிலையம் பகுதியில் தோண்டப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அப்பொழுது 70 மில்லியன் ஆண்டுகள் பழமையான பாறைகளில் உள்ளே முட்டைகளின் கூட்டினுள்  பாதுகாக்கப்பட்ட கருக்கள்  கொண்ட டைனோசரின் புதை படிவங்கள்  கண்டுபிடிக்கப்பட்டன. மேலும்  இந்த டைனோசரில்  சுமார் 24 முட்டைகள் கொண்ட ஒரு கிளட்சில் வயது வந்த ஓவிராப்டோரோசரின் முட்டைகள் அடைத்து வைத்திருப்பதை கண்டறிந்தனர்.

மேலும் ஏழு பாதிக்கப்படாத கரு மற்றும் டைனோசர்களின் எலும்பு எச்சங்கள் இருப்பதையும் கண்டறிந்தனர்.இவ்வகை டைனோசர் மிகவும் அரிதானது என்று  கார்னகி இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் உள்ள  மத்தேயு லமன்னா கூறியுள்ளார். மேலும் இது பறவைகள் போன்ற  தேரோபாட்  டைனோசரின் குழுவிலுள்ள ஓவிராப்டோரோசரின்  எச்சங்கள் 70  மில்லியன் ஆண்டுகள் பழமையானது  என்று ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |