Categories
தேசிய செய்திகள்

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்… எந்தெந்த சேவைகளுக்கு பாதிப்பு…?

இன்றும் நாளையும் பொதுத்துறை வங்கிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் எந்தெந்த சேவைகளுக்கு பாதிப்புகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வோம் .

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை எதிர்த்து பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். மத்திய அரசின் இந்த அறிவிப்பால் வங்கி ஊழியர்களின் வேலை பறிபோகும் நிலை ஏற்படும். இதனால் வங்கி ஊழியர்கள் நிலை குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். இருப்பினும் இது குறித்து பேச மத்திய அரசு வங்கி ஊழியர்கள் சங்கம் அழைக்க படாததால்
இன்று போராட்டம் நடைபெறுகிறது.

போராட்டத்தை அகில இந்திய வங்கிகளின் அதிகாரிகளின் கூட்டமைப்பு, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு ஆகியவை கலந்து கொள்கின்றன. வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தின் காரணமாக பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட சேவை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வங்கிகளில் டெபாசிட் கிளியரன்ஸ் மற்றும் கடன் வாங்குதல் பாதிப்பு ஏற்படலாம்.

மக்கள் பணம் எடுக்க வசதியாக ஏடிஎம்கள் இயங்கும் என்றாலும், அவற்றில் பணம் போட ஊழியர்கள் இல்லாததால் விரைவில் அவை காலி ஆகி விடும் அபாயம் உள்ளது. வேலை நிறுத்தத்தில் தனியார் வங்கி ஊழியர்களின் இணையவில்லை என்பதால் பணிகள் வழக்கம் போல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |