தமிழகத்தில் முதல்முறையாக இயற்கை எரிவாயு கிட் பொருத்தப்பட்டு தனியார் பயணிகள் பேருந்து இயக்கப்பட்டது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்பட்டு வந்தன. அதன்பிறகு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் முதல் முறையாக ராசிபுரத்தில் பயோ கேஸ் என்று கூறப்படும் இயற்கை எரிவாயு கிட் பொருத்தப்பட்டு தனியார் பயணிகள் பேருந்து இயக்கப்பட்டது. தற்போது தனியார் பேருந்து சோதனை ஓட்டம் மட்டுமே முடிந்துள்ளது. பெட்ரோல் டீசலுக்கு ஆகும் செலவைவிட சிஎன்ஜி கேஸ் பயன்படுத்துவது 40% செலவில் மீதம் ஆகிறது. இதற்கு வாகனங்களின் அமைப்பை சிறிதளவு மாற்ற வேண்டும். இது மக்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.