Categories
தேசிய செய்திகள்

முதல் கணவனின் மகளிடம் தவறாக நடக்க முயன்றதால்… கணவனை கொளுத்திய மனைவி… அதிர வைத்த சம்பவம்..!!

ஹைதராபாத்தில் மகளிடம் தவறாக நடக்க முயற்சி செய்த கணவரை கொலை செய்துவிட்டு அவரை எரித்து குழிதோண்டிப் புதைத்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

ஹைதராபாத் வனஸ்தலிபுரம் பகுதியை சேர்ந்த அகர்வால் என்பவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவதாக நவுசீன் பேகம் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். நவுசீன் பேகம் தன்னுடைய முதல் கணவரை விவாகரத்து செய்து தனது 5 குழந்தைகளுடன் இரண்டாவதாக அகர்வாலை திருமணம் செய்து கொண்டார். ஒரு வருடத்திலேயே இவர்களுக்குள் விரிசல் விழுந்தது .ஏனெனில் அகர்வால் தினமும் குடித்துவிட்டு நவுசீன் பேகம்  முதல் கணவருக்கு பிறந்த மகளிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார்.

இதை பலமுறை கண்டித்தும் அவர் மீண்டும் மீண்டும் தொடர்ந்து அதை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி இரவு மது போதையில் வீட்டுக்கு வந்த அகர்வால் பெண் குழந்தையிடம் தவறாக முயற்சி செய்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து நவுசீன் பேகம் அகர்வாலை கொலைசெய்து வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக வீட்டிலேயே அவரை எரித்துள்ளார்.

பின்னர் வீட்டின் முன்புறத்தில் ஆழமான குழி தோண்டி புதைத்து உள்ளார். சில நாட்களில் உறவினர்கள் அவரை பற்றி விசாரிக்கும்போது பதற்றமடைந்த நவுசீன் பேகம் காவல் நிலையத்தில் கணவரை காணவில்லை என்று புகார் அளித்ததார்.இது குறித்து விசாரிக்கத் தொடங்கிய காவல்துறையினர் அகர்வாலின் முதல் மனைவி மற்றும் தம்பி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது நவுசீன் பேகம் மற்றும் அவர்களுக்கு இடையே சண்டைகளை விளக்கிக் கூறினர் .காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் உண்மையை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அதை போலீசார் கைது செய்தனர்.

Categories

Tech |