கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் உள்ள நவக்கரை மலை கிராமத்தில் யானை வாளையாறு ஆற்றில் தண்ணீர் குடிப்பதற்காக தண்டவாளத்தை கடந்து சென்றுள்ளது. அப்போது அந்த வழியாக வந்த ரயில் ஒன்று 15 வயது மதிக்கத்தக்க அந்த யானை மீது மோதியதில் தலை மற்றும் இடுப்பு பகுதியில் பலத்த காயம் அடைந்ததால் அங்கேயே படுத்துக் கிடந்ததுள்ளது. இதை ரயில் ஓட்டுனர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானையை மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும் தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் ரயில்கள் வனப்பகுதி வழியாக மெதுவாக செல்ல வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் நிலையில் ரயில் ஓட்டுனர்கள் அதையும் கண்டு கொள்ளாமல் வேகமாக இயங்குகின்றனர். இதனால் யானைகள் அடிபடுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். யானை ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ள சமபவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.