Categories
அரசியல் மாநில செய்திகள்

வயலில் இறங்கி நடவு செய்த அதிமுக அமைச்சர்… வைரல் வீடியோ…!!!

தமிழகத்தில் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் வயலில் இறங்கி பெண்களுடன் சேர்ந்து நடவு செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டு வருகிறது.

அதுமட்டுமன்றி தொகுதி பங்கீடு பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக ஒவ்வொரு கட்சியும் போட்டியிட்டுக் கொண்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அதில் மக்களை கவரும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் மக்களைக் கவர அனைத்து கட்சியினரும் மக்களிடம் நேரடி தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில் வயலில் இறங்கி பெண்களுடன் சேர்ந்து நடவு செய்த அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர், தெம்மாங்கு பாட்டு பாடி அசத்தினார். அவரது ட்விட்டர் பக்கத்தில், விராலிமலை தொகுதியில் எம் மக்களோடு, என்றென்றும் அவர்கள் வீட்டு பிள்ளையான நான், வயலில் இறங்கி நாற்று நட்டேன். நாற்றுகள் கதிர் பிடித்து களம் சேர்வது போல் என் கரம் சேரும் மாபெரும் வெற்றி என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |