Categories
அரசியல் மாநில செய்திகள்

அமமுக 4-ம் கட்ட…. வேட்பாளர் பட்டியல் வெளியீடு…!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பமும், இழுபறியும் நீடித்து வருகிறது. இந்நிலையில் சசிகலாவால் அரசியலில் திருப்பம் ஏற்படும் என்று எதிர்பார்த்த நிலையில்,ஒதுங்குவதாக அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து அவரை நம்பி இருந்த டிடிவி தினகரன் மன வருத்தத்தில் இருந்தார். பின்னர் அது ஒருபுறமிருக்க மறுபுறம் தேர்தல் குறித்த வேலைகளில் ஈடுபட்டு வருகிறார் டிடிவி.

இந்நிலையில் அமமுக கட்சியின் நான்காம் கட்ட வேட்பாளர் பட்டியல் சற்று முன் வெளியாகி உள்ளது. ஆர்கேநகர் -டாக்டர் பி.காளிதாஸ், அரக்கோணம் – கே.சி மணிவண்ணன், ராணிப்பேட்டை – திரு ஜி.வீரமணி, ஆற்காடு- என்.ஜனார்த்தனன், கீழ்பெண்ணத்தூர் – பி.கே.எஸ் கார்த்திகேயன், அம்பாசமுத்திரம்-செ.ராணி ரஞ்சிதம், நாங்குநேரி – எஸ்.பரமசிவ ஐயப்பன்.

Categories

Tech |