Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திரௌபதி அம்மன் கோவிலில் விழா…. பிரம்மாண்டமாக நடந்த கொடியேற்றம்…. பக்தர்கள் சுவாமி தரிசனம்….!!

மதுரை மாவட்டத்தில் திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் விழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம் மேலூரையடுத்த திருவாதவூரில் திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்து வழிபடுவது வழக்கம் . மேலும் இக்கோவிலின் திருவிழா என்றாலே அந்த ஊர் மக்களுக்கு மிகவும் விசேஷமான ஒன்றாக இருக்கிறது . ஏனெனில் இக்கோவிலில் நடைபெறும் பூக்குழி திருவிழா அனைத்து மக்களையும் கவரும் வகையில் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கிறது .

மேலும் அம்மனுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகள் மற்றும் நறுமண பொருட்களால் செய்யப்படும் அலங்காரம் ஆகியவற்றை காண கண் கோடி வேண்டும் என்றளவில் அமைகிறது. இந்நிலையில் இந்த வருடம் திரௌபதி அம்மன் கோவிலின் பூக்குழி திருவிழாவிற்காக கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்திருக்கிறார்கள்.

Categories

Tech |