மகா சிவராத்திரி அன்று ஈஷா யோகா மையத்தில் பிரபல நடிகைகள் நடனம் ஆடி கொண்டாடியுள்ளனர்.
கோவையில் உள்ள ஈஷா யோக மையத்தில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டும் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது. உலகம் முழுவதும் இருக்கும் பல லட்சக்கணக்கான மக்கள் மகா சிவராத்திரியன்று இங்கு வருகை புரிந்து ஆதியோகி சிலை முன்பு வழிபட்டு செல்வர்.
ஆனால் இந்த வருடம் கொரோனா பெருந்தொற்று காரணமாக குறிப்பிட்ட பக்தர்களுக்கு மட்டுமே நேரில் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த விழாவில் நடிகை சமந்தா, ரகுல் ப்ரீத் சிங், தெலுங்கு பட நடிகையான லட்சுமி மஞ்சு ஆகியோர் கலந்து கொண்டு நடனம் ஆடியுள்ளனர். அப்போது சமந்தா தனது சக நடிகைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.