Categories
சினிமா தமிழ் சினிமா

ஏ.ஆர்.ரஹ்மானின் கனவு திரைப்படம்…. வெளியான ரிலீஸ் தேதி…. ரசிகர்கள் கொண்டாட்டம்…!!

ஏ.ஆர்.ரஹ்மானின் கனவு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “99 ஸாங்ஸ்”.இப்படம் தனது கனவு படம் என்று இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் 6 ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்திருந்தார். ஏனென்றால் அவர் இப்படத்திற்கு இசை மட்டும் அமைக்கவில்லை. இப்பட கதையை எழுதியவர் இவர்தான்.

கடந்த 2015 ல் தொடங்கப்பட்ட இப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இப்படத்தில் ஏ ஆர் ரஹ்மான் 14 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இதன் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் 99 ஸாங்ஸ் படத்தின் ரிலீஸ் தேதியை ஏ ஆர் ரஹ்மான் அறிவித்துள்ளார்.

அதன்படி இசையை மையமாக கொண்டு உருவாகபட்டுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 16-ஆம் தேதி வெளியாக உள்ளது.மேலும் இப்படத்தில் எடில்ஸி, இஹான், மனீஷா கொய்ராலா ஆகியோர் நடித்துள்ளனர். ஏ ஆர் ரஹ்மானின் கனவு படத்தை காண்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |